வங்கக் கடலில் உருவான யாஸ் புயல் ஒடிசாவின் வடக்கு பகுதியில் கரையை கடந்தது. அதனால் அம் மாநிலத்தின் வடக்கு மாவட்டங்களிலும் மேற்கு வங்கத்தின் கடலோர மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. மணிக்கு 155 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசியதால் மின்கம்பங்கள், மரங்கள் வேரோடு சாய்ந்தன. பாலா சோரில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் புயல் கரையை கடந்த இருப்பதால மாவட்டத்திலும் அதிக அளவிலான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனாலும் புயல் கரையை கடந்த போதிலும் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.
தற்போது புயல் வலுவிழந்து இன்று நள்ளிரவு ஜார்கண்ட் மாநிலத்தை தாக்கலாம் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் புயல் காரணமாக ஒடிசாவில் தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த சுமார் 6 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேற்கு வங்க மாநிலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 15 லட்சம் பேர் பாதுகாப்பான பகுதிக்கு மாற்றப்பட்டனர். ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சரிசெய்யும் பணியில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.