Categories
தேசிய செய்திகள்

ஏடிஎம், வங்கி சேவை ஜூலை 1 முதல்…. எஸ்பிஐ வங்கி அதிர்ச்சி அறிவிப்பு….!!!!

தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். அதில் தங்களின் தேவைக்கு ஏற்றவாறு பணம் எடுப்பதற்கு ஏடிஎம் பயன்படுத்தப்படுகிறது. அவசர பணத் தேவைகளுக்கு மற்றும் சாதாரண பல சேவைகளுக்கு ஏடிஎம் மையம் செல்வது வழக்கம் தான். நகர்ப்புற மக்கள் முதல் கிராமப்புற மக்கள் வரை அனைவரும் ஏடிஎம் பயன்படுத்தி வருகிறார்கள். தற்போதைய காலகட்டத்தில் பணப் பரிவர்த்தனைகள் நவீனமாகி கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் எஸ்பிஐ வங்கி BSBDA கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஏடிஎம் வங்கி சேவை, காசோலை புத்தகம் ஆகியவற்றுக்கான கட்டணத்தை ஜூலை 1 முதல் உயர்த்த உள்ளது. அதன்படி வங்கி கிளைகள் மற்றும் ஏடிஎம்களில் 4 முறை மட்டுமே இலவசமாக பணம் எடுக்க முடியும். ஐந்தாவது முறை பணம் எடுத்தால் 15 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும். மேலும் நிதி ஆண்டில் 10 காசோலைகள் இலவசம். அதற்குமேல் காசோலைகள் இருக்கு 40 ரூபாய் முதல் 75 ரூபாய் வரையும் கூடுதல் ஜிஎஸ்டியும் வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |