Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கட்டிட வேலைக்கு சென்ற பெண்…. தண்ணீர் தெளிக்கும் போது நேர்ந்த சோகம்…. கண்ணீரில் குடும்பம்….!!

கட்டுமான வேலைக்கு சென்ற பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்திலுள்ள இ.மலம்பட்டி கிராமத்தில் சேகர் சுகந்தம்மாள் என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். சுகந்தம்மாள் அப்பகுதியில் உள்ள ஆசைத்தம்பி என்பவரது வீட்டில் கட்டுமான வேலைக்கு சென்றுள்ளார். அங்கு மின்சாரம் மோட்டாரை இயக்கி கட்டிட சுற்றுச்சுவருக்கு தண்ணீர் தெளித்துள்ளார். அந்த சமயத்தில் சுகந்தம்மாள் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார்.

இதனையடுத்த அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து தகவலறிந்த கீழவளவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |