ரூ. 1000 இழப்பீடு கேட்டு பாபா ராம்தேவுக்கு இந்திய மருத்துவ சங்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
யோகா குரு பாபா ராம்தேவ் ஆங்கில மருத்துவம் குறித்து கடுமையான விமர்சனங்களை செய்திருந்தார். அவர் ஆங்கில மருத்துவத்தை ” முட்டாள் மருத்துவம்” என்று கூறியது பெரும் சர்ச்சையானது. அதுமட்டுமில்லாமல் ஆங்கில மருந்துகளை சாப்பிட்டு தான் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருவதாகவும் அவர் தெரிவித்திருந்தார். ராம்தேவ் கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இதற்கு பல அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.
இதை அடுத்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் ராம்தேவ் தனது கருத்துக்களை திரும்பப் பெற வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்திருந்தார். பின்னர் ராம்தேவ்வும் கருத்தை திரும்பப் பெறுவதாக அறிவித்திருந்தார். அதுமட்டுமில்லாமல் தனது கருத்து யாரையாவது காயப்படுத்தி இருந்தால் வருத்தம் தெரிவிப்பதாகவும் கூறினார். ஆனால் தற்போது பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ் அடுத்த 15 நாட்களில் எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேட்கவில்லை என்றால், ரூபாய் ஆயிரம் கோடி இழப்பீடு தர வேண்டும் என்று இந்திய மருத்துவ சங்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.