தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக ஏற்கனவே மே-10 முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக ரயில்களில் பயணிகளின் போக்குவரத்து குறைந்தததால் 12 சிறப்பு ரயில்கள் மே-31 வரை ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் மேலும் நேற்று முதல் ஊரடங்கு ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
எனவே ரயில் சேவை மேலும் ஜூன், 15, 16 வரை நீட்டித்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சென்ட்ரல்-மங்களூரு, கேஎஸ்ஆர் பெங்களூரு -எர்ணாகுளம், மதுரை-திருவனந்தபுரம், எழும்பூர்-திருச்செந்தூர், எழும்பூர்-மன்னார்குடி, காரைக்கால்-எர்ணாகுளம் சிறப்பு ரயில்கள் ஜூன்-15, 16 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.