Categories
மாநில செய்திகள்

மாற்றுத்திறனாளிகள் தடுப்பூசி போட்டுக்கொள்ள…. இந்த எண்ணுக்கு அழைக்கலாம் – சென்னை மாநகராட்சி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டாலும் தடுப்பூசி போடுவது ஒன்றே நிரந்தர தீர்வு ஆகும். இதனால் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தடுப்பூசி போடுவதில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தடுப்பூசி மையத்தையும் முதல்வர் சென்னையில் தொடங்கி வைத்தார். இதற்கு மத்தியில் சென்னையில் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது. மேலும் தற்போது மாற்றுத்திறனாளிகள் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான உதவி எண்ணை சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார்.

அதன்படி, தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு காணொளி மூலமாக பதிவு செய்து கொள்ள 18004259111, 9700799993 என்ற எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக பதிவு செய்தவர்களின் வீடுகளுக்கு அருகிலேயே தடுப்பூசி மையம் அமைக்கப்பட்டு தடுப்பூசி போடப்படும் என ககன்தீப் சிங்க் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |