கர்நாடக மாநிலத்தில் வாகன பரிசோதனையில் இருந்து தப்பிக்க முயன்ற இளைஞர்கள் செக்போஸ்டில் மோதி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் மக்கள் வீட்டிலேயே இருக்கும்படி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இருப்பினும் ஒரு சில இளைஞர்கள் வீட்டில் இருக்க முடியாமல் வெளியில் ஊர் சுற்றி வருகின்றனர். அவர்களில் பலரை காவல்துறையினர் பிடித்து வழக்கு பதிவு செய்து வருகின்றனர். சில இளைஞர்கள் அவர்களிடமிருந்து எப்படியாவது தப்பிக்க வேண்டும் என்று அதி வேகமாக வாகனங்களை ஓட்டிச் சென்று விபத்தில் சிக்கிக் கொள்கின்றனர். அப்படிப்பட்ட ஒரு சம்பவம் தான் தற்போது நடந்துள்ளது.
தெலுங்கானா மாநிலம், ஜன்னாரம் பகுதியில் போலீஸ் செக்போஸ்ட் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் இரண்டு இளைஞர்கள் அதிவேகமாக வந்தனர். காவல்துறையினர் அங்கு நின்று சிக்னல் கொடுத்தபோதும் பைக்கை நிறுத்தாமல் வேகமாக ஓடிவந்து செக்போஸ்டில் இடித்ததில் பைக்கின் பின்புறம் அமர்ந்திருந்த இளைஞன் இரும்பு கம்பியில் மாட்டி தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த சிசிடிவி காட்சி பார்ப்போரின் நெஞ்சை பதைபதைக்க வைக்கின்றது. மக்களின் பாதுகாப்பு கருதி தான் அரசாங்கம் ஊரடங்கு அமல்படுத்தி வருகின்றது. ஆனாலும் நீங்கள் வீட்டில் இல்லாமல் வெளியில் சுற்றுவதால் கொரோனா அதிகரிப்பதுடன் மட்டுமல்லாமல் இதுபோன்ற சம்பவங்களும் அரங்கேறுகின்றன. எனவே அனைவரும் பாதுகாப்பாக வீட்டிலேயே இருங்கள்.