Categories
உலக செய்திகள்

புதிதாக திருமணமான பெண் கொலை.. நீதிபதியின் தீர்ப்பு..!!

கனடாவில் கடந்த 2015 ஆம் வருடத்தில் நடந்த கொலை வழக்கில் தொடர்புடைய பெண்ணிற்கு Conditional discharge ஆணை பிறப்பிக்க நீதிபதி மறுத்துள்ளார். 

கனடாவில் வசிக்கும் Rosemarie “Kim” Junor என்ற 28 வயது இளம்பெண் திருமணம் முடிந்து, சில நாட்களே ஆன நிலையில் மருந்து வாங்க கடைக்கு சென்றபோது, அவரை காரணமின்றி ஒரு பெண் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இச்சம்பவம் கடந்த 2015-ம் வருடம் டிசம்பர் மாதத்தில் நடந்துள்ளது.

இந்த சம்பவத்தில் Rohinie Bisesar என்ற 40 வயது பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர். ஆனால் நீதிமன்றம் அவர் மனநல பாதிப்பால் தான் கொலை செய்தார் என்றும் குற்றத்திற்கு அவர் காரணமல்ல என்றும் கூறிவிட்டது. தற்போது மனநல மையத்தில் Rohinie இருக்கிறார். இந்நிலையில் கடந்த வாரம் Rohinieயின் வழக்கறிஞர், அவருக்கு Conditional discharge ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று வாதாடியுள்ளார்.

அதாவது Conditional discharge என்றால் குற்றம் செய்த ஒரு நபர் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் மீண்டும் வேறு குற்ற செயலை செய்யவில்லை எனில் அவருக்கு தண்டனை கிடையாது என்பதாகும். எனவே Rohinie மருந்துகள் உட்கொள்வதால், குற்ற செயல்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் குறைவு.

எனவே அவரை மீண்டும் சமூகத்திற்குள் அனுமதிக்க வேண்டுமென்று வாதாடியுள்ளார். ஆனால் மனநல மருத்துவரான Dr. Georgia இவ்வளவு நாட்கள் மனநல காப்பகத்தில் இருந்துவிட்டு திடீரென்று வெளியில் செல்ல நேர்ந்தால் மீண்டும் அவர் மனநல பாதிப்புக்குள்ளாக வாய்ப்பிருக்கிறது என்று கூறினார்.

எனவே நீதிபதி Michael Feindel, அவரை மீண்டும் சமுதாயத்தில் அனுமதித்தால், என்ன நேரும்? என்று தெரியாது. மேலும் இந்த வழக்கினை மக்கள் நன்றாக அறிவார்கள். Rohinie ஐ பல தடவை மக்கள் செய்திகளில் பார்த்திருக்கிறார்கள். எனவே அவரை நேரில் பார்க்கும்போது எவரேனும் அருகில் சென்று ஏதாவது சொன்னால், அவர் பதற்றத்தில் ஏதேனும் செய்ய வாய்ப்பிருக்கிறது என்று கூறி Conditional discharge கொடுக்க மறுத்துள்ளார்.

Categories

Tech |