Categories
தேசிய செய்திகள்

என் தந்தை இறந்ததற்கு இவர்கள் தான் காரணம்… கொரோனா வார்டில் புகுந்து மருத்துவரை தாக்கிய மகன்… வைரலாகும் வீடியோ..!!

கொரோனா தொற்றால் தந்தை உயிரிழந்த காரணத்தினால் இறந்தவரின் மகன் கொரோனா வார்டுக்குள் புகுந்து மருத்துவரை தாக்கிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

பெல்லாரி டவுன் என்ற பகுதியை சேர்ந்த 65 வயதான முதியவர் கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மருத்துவமனையில் சரியாக சிகிச்சை அளிக்காத காரணத்தினால் தான் அவரது தந்தை உயிரிழந்தார் என்று எண்ணி அவரது மகன் திப்பேசாமி என்பவர் கொரோனா வார்டில் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த டாக்டர் பிரியதர்ஷினி என்பவரை தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

திபேசாமி பிரியதர்ஷினியை தாக்கும் காட்சிகள் கொரோனா வார்டில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Categories

Tech |