பாலதண்டாயுதபாணி கோவிலில் வைகாசி விசாக சிறப்பு பூஜை பக்தர்கள் இன்றி நடைபெற்றுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள வாடிப்பட்டி பகுதியில் இருக்கும் குலசேகரன்கோட்டை கிராமத்தில் சிறுமலை அடிவாரத்தில் பழமை வாய்ந்த பாலதண்டாயுதபாணி கோவில் உள்ளது. இந்த கோவிலில் வைகாசி விசாக திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கொரோனா காரணமாக தமிழகத்தில் அனைத்து கோயில்களும் மூடப்பட்டுள்ளது.
இதனால் நேற்று வைகாசி விசாகத்தை ஒட்டி முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை செய்யப்பட்டுள்ளது. இந்த பூஜையில் கோவில் பூசாரி மற்றும் கோவில் நிர்வாகிகள் சிலர் மட்டுமே கலந்து கொண்டனர். கோவில் பூட்டப்பட்டு இருந்ததால் பக்தர்கள் யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை இதனால் கோவில் வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது