அமெரிக்காவில் 15 வயது சிறுமியை ஒரு நபர் பல மாதங்களாக பாலியல் துன்புறுத்தல் செய்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள பக்ஹனோன் என்ற நகரில் வசிக்கும் 30 வயது நபர் லீ ஸ்பியர்ஸ். இவர் 15 வயது சிறுமி ஒருவரை கடந்த வருடம் நவம்பர் மாதத்திலிருந்து இந்த வருடம் மார்ச் மாதம் வரை பல தடவை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளார். மேலும் தொலைபேசியிலும் மோசமாக பேசி வந்துள்ளார்.
இது குறித்து காவல்துறையினரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்பு லீ ஸ்பியர்ஸ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவருக்கு $75 ஆயிரம் ஜாமீன் தொகை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.