புதுக்கோட்டை மாவட்டத்தில் ரேஷன் கடை திறக்கப்பட்டு பொது மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவின் 2 வது அலை அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொது மக்கள் நலன் கருதி ரேஷன் கடைகள் காலை 8 மணி முதல் 12 மணி வரை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கீரனூர் பகுதியிலிருக்கும் ரேஷன் கடை திறக்கப்பட்டுள்ளது. அப்போது பொது மக்கள் வரிசையில் நின்று முக கவசம் அணிந்து மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடித்து பொருட்களை வாங்கிச் சென்றுள்ளனர்.