Categories
டெக்னாலஜி

பிஎஸ்என்எல்-லில் தினமும் 2ஜிபி டேட்டா… அட்டகாசமான திட்டம்…!!!

பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது அசத்தலான திட்டங்களை அறிமுகம் செய்துகொண்டிருக்கிறது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் திட்டங்கள் அனைத்தும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெறுகிறது. இந்த ஆண்டு பிஎஸ்என்எல் நிறுவனம் பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.

பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.197 ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா கிடைக்கும். பின்பு குறிப்பிட்ட டேட்டாவை முழுவதுமாக பயன்படுத்திய பின்னர் 80 கே.பி.பி.எஸ் என்கிற வேகத்தின் கீழ் இன்டர்நெட்டை பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ரூ.197 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 180 நாட்கள் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர இலவச குரல் அழைப்பு நன்மைகள், தினசரி 100 இலவச எஸ்எம்எஸ்கள், 18 நாட்களுக்கு ஸிங் மியூசிக் பயன்பாட்டிற்கான அணுகல் உள்ளிட்ட பல சலுகைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |