சூர்யா 40 படத்தின் அப்டேட் கேட்ட ரசிகர்களுக்கு இயக்குனர் பாண்டிராஜ் பதிலளித்துள்ளார் .
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சூர்யாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யா 40 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரியங்கா அருள்மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் சத்தியராஜ், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார் . இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இயக்குனர் பாண்டிராஜ் நடிகர் கார்த்தியின் பிறந்த நாளன்று டுவிட்டர் ஸ்பேஸில் கலந்துகொண்டபோது ‘சூர்யா 40’ படம் குறித்து பேசியுள்ளார். அதில் ‘கார்த்தி ரசிகர்கள் கடைக்குட்டி சிங்கம் படத்தை எப்படியெல்லாம் என்ஜாய் செய்தார்களோ அதே போல் இந்த படத்தை சூர்யா ரசிகர்கள் என்ஜாய் பண்ணுவார்கள். இந்த படத்தின் டைட்டில் லுக் முதல் அனைத்தும் சிறப்பாக வந்துள்ளது. சூர்யா ரசிகர்கள் அப்டேட் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். இதனால் டுவிட்டர் பக்கமே வர முடியவில்லை’ என கூறியுள்ளார்.