Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் 18-44 வயதினருக்கு செலுத்த தடுப்பூசி இல்லை… அரவிந்த் கெஜ்ரிவால்..!!

டெல்லியில் தற்போது தடுப்பூசி இல்லாத காரணத்தினால் 18 முதல் 44 வயதுக்குட்பட்டவர்களுக்கு கடந்த 4 நாட்களாக தடுப்பூசி போடவில்லை என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் 18 வயது முதல் 44 வயது உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்று குறிப்பிட்டு இருந்தனர். ஆனால் பல மாநிலங்களில் தற்போது தடுப்பூசி பற்றாக்குறை இருந்து வருகின்றது. இதன் காரணமாக அந்தந்த மாநிலத்தை சேர்ந்த முதல்வர்கள் தடுப்பூசியை விரைந்து அனுப்ப வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அதே நிலையில் டெல்லியில் தடுப்பூசி இல்லை என்ற காரணத்தினால் நான்கு நாட்களாக 18 முதல் 44 வயது நபருக்கு போடப்படும் தடுப்பூசி மையங்கள் மூடபட்டுள்ளதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய முற்பட்டபோது மாநிலங்களோடு ஒப்பந்தம் போட நிறுவனங்கள் தடுப்பூசியை தர மறுக்கின்றனர். இதனால் தடுப்பூசி நிறுவனங்களிடம் இருந்து தடுப்பூசியை பெற மத்திய அரசால் மட்டுமே முடியும். விரைந்து தடுப்பூசியை இறக்குமதி செய்து மாநிலங்களுக்கு வினியோகிக்க வேண்டும்” என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Categories

Tech |