Categories
தேசிய செய்திகள்

தெலுங்கானாவில் முழு ஊரடங்கு நீட்டிப்பு..? மே 30ம்-ம் தேதி அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு…!!!

தெலுங்கானா மாநிலத்தில் முழு ஊரடங்கு நீக்கப்படுவது குறித்து வரும் 30ம் தேதி அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இதையடுத்து தெலுங்கானாவில் கடந்த 12ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

அதன்பிறகு ஊரடங்கை மே 30-ஆம் தேதி வரை நீட்டித்து அம்மாநில முதல்வர் சந்திரசேகரராவ் உத்தரவிட்டார். வரும் 30ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் முழு ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |