Categories
சேலம் மாவட்ட செய்திகள்

2 வது நாளாக கடைப்பிடிப்பு.. முழு ஊரடங்கு… வெறிச்சோடிய சாலைகள்..!!

சேலம் மாவட்டத்தில் ஊரடங்கு அமலில் உள்ளதால் 2 வது நாளாக சாலைகள் அனைத்தும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவின் 2 வது அலை அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள மளிகை கடை, காய்கறி கடைகள் அனைத்தும் 2 வது நாளாக அடைக்கப்பட்டிருந்தது.

மேலும் உழவர் சந்தை மற்றும் காய்கறி மார்க்கெட் அனைத்தும் மூடப்பட்டிருந்ததால் செவ்வாய்பேட்டை, லீபஜார், சின்னக்கடை வீதி மற்றும் புதிய பேருந்து நிலையம் உட்பட பல இடங்களில் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாமல் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டுள்ளது.

Categories

Tech |