Categories
உலக செய்திகள்

பிரிட்டனுடன் வர்த்தக உறவில் சீனா முன்னேற்றம்.. கொரோனா காலகட்டத்தில் வளர்ச்சி..!!

சீனா, பிரிட்டன் உடனான வர்த்தக உறவில், ஜெர்மனியை விட உயர்ந்து, பெரிய இறக்குமதி சந்தையாக வளர்ந்திருக்கிறது.

பிரிட்டனிற்கு கடந்த 2018 ஆம் வருடத்தில் 16.9 பில்லியன் பவுண்டுகள் மதிப்புடைய பொருட்கள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. ஆனால், தற்போது அது 66% ஆக அதிகரித்திருப்பதாக தெரியவந்துள்ளது. மேலும் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறியதிலிருந்து நிலையற்ற தன்மை ஏற்பட்டது.

எனவே கடந்த 2019 ஆம் வருடம் ஏப்ரல் மாதத்திலிருந்து ஜெர்மனியின் இறக்குமதி, பிரிட்டனில் குறைய ஆரம்பித்தது. அதாவது கடந்த 1997 ஆம் வருடத்திலிருந்து (சில மாதங்கள் தவிர்த்து) பிரிட்டனுக்கு ஜெர்மனியிலிருந்து தான் அதிகமாக பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டு வந்துள்ளது. பிரிட்டனுக்கு ஐரோப்பிய ஒன்றியத்துடன் உள்ள வர்த்தகத்தில் 23.1% வீழ்ச்சி அடைந்திருந்தாலும் பிரிட்டனின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளி ஐரோப்பிய ஒன்றியம் தான்.

ஆனால் பிரிட்டனிற்கு கொரோனா காலகட்டத்தின் போது, முகக்கவசத்திற்கு தேவையான துணி, பாதுகாப்பு கருவிகள் மற்றும் அதிக அளவில் மின் சாதனங்கள் போன்றவற்றை சீனா இறக்குமதி செய்தது. எனவே கொரோனாவிலிருந்து மீண்டதோடு, இந்த கால கட்டத்தில் வர்த்தகத்தில் வளர்ச்சியடைந்த முதல் பெரிய நாடு சீனா தான் என்ற பெருமையை பெற்றுள்ளது.

Categories

Tech |