Categories
தேசிய செய்திகள்

யாஷ் புயல் எதிரொலி… 3 லட்சம் வீடுகள் சேதம்… மம்தா பானர்ஜி அறிவிப்பு…!!

யாஷ் புயல் காரணமாக மேற்கு வங்கத்தில் 3 லட்சம் வீடுகள் சேதமடைந்துள்ளதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறி ஒடிசா மற்றும் சாகத் தீவுக்கு இடையே இன்று மதியம் கரையை கடந்தது. இந்து புயலுக்கு யாஷ் என்று பெயரிடப்பட்டது. இதையடுத்து இந்தப் புயலின் காரணமாக மணிக்கு 165 கிலோ மீட்டர் முதல் 185 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசியது. இந்த புயல் காரணமாக வீடுகள் சேதமடைந்துள்ளன.

மேலும் மேற்கு வங்கத்தில் 15 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.  இந்த புயலில் ஒரு கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேலும் மூன்று லட்சம் வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் கள ஆய்வுக்கு பின் முழுமையான அறிக்கை அளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |