தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஏற்கனவே அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கை நீட்டித்து மேலும் ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற கடுமையான ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. வேண்டுமானால் மேலும் ஊரடங்கை நீட்டிக்க வாய்ப்புள்ளது என முதல்வர் அறிவித்திருந்தார்.
இந்த முழு ஊரடங்கினால் கொரோனா வெகுவாக குறையவில்லை, மக்களும் அலட்சியமாக வெளியே சுற்றி திரிகின்றனர். இதனால் ஊரடங்கை இன்னும் கடுமையாக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 11 மணிக்கு அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்வுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.