தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். அதில் தங்களின் தேவைக்கு ஏற்றவாறு பணம் எடுப்பதற்கு ஏடிஎம் பயன்படுத்தப்படுகிறது. அவசர பணத் தேவைகளுக்கு மற்றும் சாதாரண பல சேவைகளுக்கு ஏடிஎம் மையம் செல்வது வழக்கம் தான். நகர்ப்புற மக்கள் முதல் கிராமப்புற மக்கள் வரை அனைவரும் ஏடிஎம் பயன்படுத்தி வருகிறார்கள். தற்போதைய காலகட்டத்தில் பணப் பரிவர்த்தனைகள் நவீனமாகி கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் வாடிக்கையாளர்கள் கணக்கு வைத்திருக்கும் கிளை தவிர்த்து பிற கிளைகளில் பணம் எடுப்பதற்கான வரம்பை எஸ்பிஐ வங்கி உயர்த்தியுள்ளது. பிற கிளைகளில் காசோலை வாயிலாக 50,000 வரை மட்டுமே எடுக்க அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது ஒரு லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. பிற கிளைகளில் காசோலை இன்றி விண்ணப்பம் வாயிலாக எடுக்கும் வரம்பை ஐந்து மடங்கு உயர்த்தி 25 ஆயிரமாக அதிகரித்துள்ளது.