கலபுரகி என்ற பகுதியில் குழந்தை பிறந்த தினத்தன்று குழந்தையின் தந்தை கொரோனாவால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கலபுரகி மாவட்டம் அப்சல்புராவை சேர்ந்த சுபாஷ் என்பவருக்கு திருமணமாகி அவரது மனைவி கர்ப்பமாக இருந்தார். இதற்கிடையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதியானது. பின்னர் அந்த மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்தார்.
இதற்கிடையில் அவரது மனைவிக்கு பிரசவ வலி ஏற்படவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதே நேரத்தில் சிகிச்சை பெற்றுவந்த சுபாஷுக்கு திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டதால் அவர் பரிதாபமாக இறந்தார். அவர் இறந்த சில மணி நேரத்திலேயே அவரது மனைவிக்கு குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்திருந்தாலும் அவரது மனைவி கணவன் இறந்ததை எண்ணி வேதனையில் துடிதுடித்த அழுதார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.