Categories
தேசிய செய்திகள்

கொரோனாவை வென்ற 103 வயது சுதந்திர போராட்ட தியாகி… திடீர் மரணம்… அரசு மரியாதையுடன் உடல் தகனம்..!!

சுதந்திரப் போராட்ட தியாகியான எச்.எஸ்.துரைசாமி தனது 103 வயதில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார். இவர்கள் உடலை அரசு மரியாதையுடன் தகனம் செய்தனர்.

பெங்களூர் ஜெயநகரில் நகரில் வசித்து வரும் 103 வயதான எச்.எஸ்.துரைசாமி சுதந்திர போராட்ட வீரர். தனது வாழ்நாள் முழுவதும் ஊழல், முறைகேடு, நீல முறைகேடுகளுக்கு எதிராக போராடி வந்தவர். கடந்த 20 நாட்களுக்கு முன்பு அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த போது கொரோனா இருப்பது உறுதியானது. பின்னர் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. கொரோனா பிடியிலிருந்து மீண்டு அவர் வீடு திரும்பினார்.

103 வயதான அவர் கொரோனாவை வென்றதை அனைவரும் வியப்புடன் பார்த்தனர். கொரோனாவில் இருந்து மீண்டு வந்தவர் திடீரென்று மரணம் அடைந்தார். இவர் கொரோனா காரணமாகத்தான் இறந்தாரா? என்பதை தெரிந்து கொள்ள அவரது சளி மாதிரியை எடுத்து பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இதனால் எச்.எஸ்.துரைசாமியின் உடலை சுகாதாரத்துறையினர் சாம்ராஜ் பேட்டையில் உள்ள மின்மயானத்தில் அரசு மரியாதையுடன் தகனம் செய்தனர்.

Categories

Tech |