Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

தேவையில்லாமல் வெளியில் வரக்கூடாது… 50 பேர் மீது வழக்குப்பதிவு… தீவிர கண்காணிப்பு பணி…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரடங்கையொட்டி தேவையின்றி வெளியில் சுற்றித்திரிந்த 50 பேரின் வாகனங்களை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவின் 2 வது அலை அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு தற்போது முழு ஊரடங்கு அமல்ப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கறம்பக்குடி பகுதியில் ஊரடங்கையொட்டி காவல் துறையினர் 4  பகுதிகளில் சோதனை சாவடி அமைத்து தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது ஊரடங்கு உத்தரவையும் மீறி தேவையின்றி வெளியே சுற்றித்திரிந்த 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்து மேலும் அவர்களிடமிருந்து வாகனங்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.

Categories

Tech |