தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால் கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால், மே 23 ஆம் தேதி முழு ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில், மே 31-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதில் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. எந்தவித தளர்வும் இல்லாமல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் அவசர மருத்துவ காரணங்கள் மற்றும் இறப்பு காரணங்களுக்காக மட்டுமே மக்கள் வெளியில் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வரும் நிலையில் முழு ஊரடங்கு ஜூன் முதல்வாரம் நீடிப்பது குறித்து மருத்துவ நிபுணர்கள், அரசு உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் தீவிர ஆலோசனை செய்து வருகிறார். முழு ஊரடங்கில் வெளியே சுற்றினால் வழக்கு, கைது நடவடிக்கை, அபராதம் மற்றும் வாகனம் பறிமுதல் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கை எடுக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஆலோசனைக் கூட்டம் முடிந்த பிறகு வெளியிடப்படும்.