Categories
மாநில செய்திகள்

போக்குவரத்து ஊழியர்களையும்…. முன்களப்பணியாளர்களாக அறிவிக்க…. ஓபிஎஸ் கோரிக்கை…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா தடுப்பு பணியில் பத்திரிகையாளர்களை முன்களப்பணியாளர்களாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் போக்குவரத்து பணியாளர்களையும் முன்கள பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு ஓ பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முன்கள பணியாளர்களுக்கான உரிமைகள், சலுகைகள் எல்லாவற்றையும் போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்க வேண்டும். ஏனெனில் பேரிடர் காலத்தில் அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்பட்டு வரும் போக்குவரத்து ஊழியர்களுடைய பணியும் போற்றுதலுக்குரியது என்று தெரிவித்துள்ளார். மேலும் ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு பணி ஓய்வு மற்றும் விருப்ப பணி ஓய்வு மற்றும் உயிரிழந்த ஊழியர்களின் ஓய்வு காலப் பயன்கள் உடனடியாக வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.

Categories

Tech |