தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஏற்கனவே அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கை நீட்டித்து மேலும் ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற கடுமையான ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் தொற்று பாதிப்பு சற்று குறைந்து வருவதாக முதல்வர் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கை (ஜூன் முதல் வாரம்) நீட்டிப்பது குறித்துமருத்துவ நிபுணர்கள், அரசு உயர் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க ஸ்டாலின் அவசர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். மேலும் முழு ஊரடங்கில் தேவையின்றி வெளியே சுற்றினால், வழக்கு, கைது நடவடிக்கை, அபராதம், வாகனம் பறிமுதல் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கை எடுக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.