தந்தை வேலைக்கு செல்லவில்லை என்று திட்டியதால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள சிவகிரி பகுதியில் முனியாண்டி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு கூலி தொழிலாளியான கணேசன் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த சில மாதங்களாகவே கணேசன் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் கணேசனின் தந்தையான முனியாண்டி இவ்வாறு வேலைக்கு செல்லாமல் சும்மா ஊரைச் சுற்றி கொண்டே இருந்தால் எப்படி சாப்பிடுவது, வாழ்வது என்று கணேசனை திட்டியுள்ளார். இதனால் கணேசன் மிகுந்த மன வேதனையுடன் இருந்துள்ளார்.
இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் கணேசன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து வெளியே சென்று விட்டு வீட்டிற்கு சென்ற அவரது பெற்றோர் கணேசன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து அலறி சத்தம் போட்டுள்ளனர். அந்த அலறல் சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து சென்று பார்த்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கணேசனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.