Categories
விளையாட்டு

ஆசிய குத்துச்சண்டை போட்டி : இந்தியாவுக்கு 15 பதக்கங்கள் உறுதி …!!!

துபாயில் நடைபெற்ற வரும் ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய அணிக்கு 15 பதக்கங்கள் உறுதியாகியுள்ளது.

துபாயில் நடைபெற்று வரும் ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி வருகின்ற 31-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் இந்தியா, கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட 17 நாடுகளைச் சேர்ந்த 150 வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற ,ஆண்களுக்கான (64 கிலோ) எடைப் பிரிவில் கால் இறுதிச்சுற்றில், இந்தியன் வீரரான ஷிவதபா குவைத் வீரரான  நாடிர் ஒடாக்கை 5-0 என்ற கணக்கில் தோற்கடித்து , அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இதன் மூலம் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் தொடர்ந்து, அவர் 5 வது முறையாக பதக்கத்தை வெல்கிறார். அதேபோல் (91  கிலோ) எடை பிரிவுக்கான காலிறுதி சுற்றில் இந்திய வீரரானத சஞ்சீத்,  தஜிகிஸ்தான் வீரரான ஜாசுர் குர்போனோவை 5-0 என்ற கணக்கில் தோற்கடிற்றது அரையிறுதி சுற்றுக்கு நுழைந்தார். இதனால் இந்திய வீரர்களின் ஆதிக்கம் நேற்றும் நீடித்தது. இதுபோல்  ( 52 கிலோ) எடை பிரிவில் நடப்பு சாம்பியனான இந்திய வீரர் அமித் பன்ஹால், மங்கோலியாவை சேர்ந்த கார்கு இங்க்மன்டாக்கை 3-2 என்ற கணக்கில் தோற்கடித்து அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

இவர்களைத் தொடர்ந்து விகாஷ் கிருஷ்ணன் (69 கிலோ) மற்றும் வரிந்தர் சிங்  (60 கிலோ)  ஆகிய இந்திய வீரர்களும் காலிறுதி சுற்றில் வெற்றியை சுவைத்தனர்.இதைத்தொடர்ந்து பெண்களுக்கான காலிறுதி சுற்றில் (54 கிலோ) எடை பிரிவில், இந்திய வீராங்கனையான சாக்‌ஷி , தஜிகிஸ்தான் வீராங்கனையான ருஹாப்சோவுடன் மோதி ,  5-0 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தார். இந்திய வீராங்கனை ஜாஸ்மின் (57 கிலோ) எடைப்பிரிவில் , மங்கோலியா வீராங்கனை  யுன்ட்செட்செக் யேசுஜென்னை 4-1 என்ற கணக்கிலும் , (60 கிலோ) எடைப்பிரிவின் காலிறுதி சுற்றில் இந்தியாவின் சிம்ரன்ஜித் கவுர், உஸ்பெகிஸ்தானின் கோடிரோவாவை 4-1 என்ற கணக்கில் தோற்கடித்து  அரைஇறுதிக்கு முன்னேறினர் . இதனால்  3 பேருக்கும் குறைந்தபட்சம் வெண்கலப்பதக்கம் உறுதியாகி உள்ளது.இவர்களைத் தொடர்ந்து 6 முறை உலக சாம்பியனான மேரிகோம் (51 கிலோ) உட்பட பல வீராங்கனைகள் அரைஇறுதிக்கு முன்னேறி இருப்பதால், மொத்தமாக  15 பதக்கங்கள் இந்தியாவுக்கு கிடைப்பது உறுதியாகி உள்ளது .

Categories

Tech |