தனுஷின் ஜகமே தந்திரம் படத்தில் நடித்த ஜேம்ஸ் காஸ்மோ தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஜகமே தந்திரம். இந்த படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி, ஜோஜு ஜார்ஜ், கலையரசன், ஜேம்ஸ் காஸ்மோ உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் 17 மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாக உள்ளது. மேலும் இந்த படம் வருகிற ஜூன் 18-ஆம் தேதி நேரடியாக ஓடிடியில் ரிலீஸாக உள்ளது.
I had the best time filming in India – what an amazing country! You guys are incredible! So excited!#JagameThandhiram
— James Cosmo MBE (@MrJamesCosmo) May 26, 2021
இந்நிலையில் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ ஜகமே தந்திரம் படம் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘ஒரு நல்ல படத்திற்காக இந்தியாவில் நான் நேரத்தை செலவு செய்தேன். இந்தியா ஒரு அற்புதமான நாடு. நீங்கள் நம்ப முடியாதவர்கள். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது’ என பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.