பாகுபலி நடிகர் பிரபாஸுக்கு வில்லனாக நடிக்க பிரபல பாலிவுட் நடிகரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
KGF படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் பிரசாத்னேல் . இவர் அடுத்ததாக பாகுபலி நடிகர் பிரபாஸை வைத்து சாலார் என்ற படத்தை இயக்குகிறார். இப்படத்தில் பிரபாஸுக்கு வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என படக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.