Categories
தேசிய செய்திகள்

மேற்கு வங்கம் நாரதா லஞ்ச ஊழல் வழக்கு… கொல்கத்தா நீதிமன்றம் இன்று விசாரணை..!!

மேற்குவங்க நாரத லஞ்ச ஒழிப்பு ஊழல் வழக்கு தொடர்பாக கொல்கத்தா உயர்நீதிமன்றம் இன்று விசாரணை நடத்தியது.

மேற்கு வங்க மாநிலத்தில் போலி நிதி நிறுவனம் ஒன்றிற்கு ஆதரவாக நடந்து கொள்வதற்காக பணம் பெற்றதாக மேற்குவங்க அமைச்சர்கள் 2 பேர், ஒரு முன்னாள் அமைச்சர் மற்றும் ஒரு எம்எல்ஏ என மொத்தம் நான்கு பேரை சிபிஐ கைது செய்தது. இதையடுத்து அவர்களுக்கு ஜாமீன் வழங்கிய கொல்கத்தா நீதிமன்றம் வீட்டுக் காவலில் வைக்க உத்தரவிட்டது. ஜாமின் தொடர்பான வழக்கில் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு இருவேறு தீர்ப்புகளை வழங்கிய காரணத்தினால், 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு இந்த விசாரணை மாற்றப்பட்டது. இந்த விசாரணை கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் இன்று காலை நடைபெற்று வருகின்றது.

Categories

Tech |