தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் கொரோனா அறிகுறிகள் இருந்தால் மருத்துவர்கள் சில மருந்துகளை பரிந்துரை செய்து வருகிறார்கள். அந்த மருந்துகளை மக்கள் நேரடியாக கடைகளுக்கு சென்று ஆன்லைன் மூலமாகவும் வாங்கி வருகின்றனர்.
இந்நிலையில் காஞ்சிபுரத்தை சேர்ந்த தமிழினி என்பவர் தனது மனைவியை கொரோனாவிற்கு பலிகொடுத்த நிலையில், உறவினர் ஒருவருக்கு மருத்துவர் பரிந்துரைத்த டோசிலி சுமாப் மருந்தை ஆன்லைனில் தேடினார். அவரைத் தொடர்பு கொண்ட மர்மநபர் ஒருவர் ரூ.42,500 செலுத்தினால் இரண்டு மணி நேரத்தில் டோர் டெலிவரி செய்வதாக கூறியுள்ளார். இதை நம்பி பணம் செலுத்தி அவர் நீண்ட நேரமாகியும் மருந்து வராததால் அதன் பிறகே தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளார். அதனால் மக்கள் தற்போதைய காலகட்டத்தில் ஆன்லைன் விற்பனைகளை நம்பி ஏமாற வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.