Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

சேலம்-சென்னை எட்டுவழிசாலை தொடங்கப்படாது- மத்திய அரசு பதில்

சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் சேலம்-சென்னை எட்டு வழி சாலை தொடங்கப்படாது என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில்  தெரிவித்துள்ளது.

எட்டு வழிச்சாலை தொடர்பாக ஏற்கனவே தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து இந்தத் திட்டத்தின் இயக்குனராக  இருக்க கூடிய நபர் சார்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யபட்டது. இந்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி  ரமணா அமர்வு முன்பு விசாரணைக்கு  வந்தது.

Image result for சேலம்-சென்னை எட்டு வழி சாலை

இதில் எட்டுவழிசலை திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான திட்ட வரைபடத்தை நீதிபதி முன்பு சமர்ப்பித்தது. அதுமட்டுமில்லாமல் சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் இந்த திட்டத்தை நாங்கள் தொடங்க மாட்டோம் என்ற உறுதியையும் மத்திய அரசு கொடுத்திருக்கின்றது.அதே நேரத்தில் சுற்றுச்சூழல் அனுமதி பெற கால அவகாசம்  ஏற்பட்டால் என்ன செய்வீர்கள் என்றும் உச்சநீதிமன்றம்  கேள்வி எழுப்பி உள்ளது.

Categories

Tech |