Categories
மாநில செய்திகள்

ஒன்னும் மன்னிப்பு கேளுங்க…. இல்லனா ரூ.1,000,00,00,000 இழப்பீடு கொடுங்க…. ராம்தேவ்க்கு சிக்கல் …!!

பதஞ்சலி நிறுவனம் பாபா ராம்தேவ் அலோபதி மருத்துவம் குறித்து கடும் விமர்சனங்களை கூறியிருந்த நிலையில் அவரிடம் ஆயிரம் கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு இந்திய மருத்துவ சங்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ் அலோபதி மருத்துவத்தை முட்டாள் மருத்துவம் என விமர்சனம் செய்திருந்தார். இது குறித்து அவர் பேசிய வீடியோவில் ஆங்கில மருந்துகளை சாப்பிட்ட லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்ததாகவும், இந்திய மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம் ஒப்புதல் அளித்த ரெம்டிசிவியர் வேவி, வுழு போன்ற மருந்துகள் கொரோனாவுக்கு மருத்துவம் அளிக்க தவறி விட்டதாகவும் கூறி இருந்தார். இது கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் ராம்தேவின் கருத்துக்கு இந்திய மருத்துவ சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து ராம்தேவ் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்தை திரும்பப் பெறுவதாக கூறியிருந்தார். இந்நிலையில் அலோபதி மருத்துவத்தை தவறாக பேசிய பாபா ராம்தேவ் அடுத்த 15 நாட்களில் எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும்.,  இல்லாவிடில் 1000 கோடி ரூபாய் இழப்பீடு தரவேண்டும் எனவும் இந்திய மருத்துவ சங்கம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

Categories

Tech |