கோவை, திருச்சி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கொரோனா தாக்கம் குறையவில்லை என்பதால் அங்கு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டு அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தற்போது தமிழகத்தில் ஒருவாரத்திற்கு தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட போதும் கோவை திருச்சி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கொரோனா தாக்கம் குறையவில்லை.
அதன் காரணமாக இந்த மாவட்டங்களில் தொற்றை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதிகளை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.