Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வேளாண் சட்டத்தை கண்டித்து… விவசாயிகளின் போராட்டம்… தூத்துக்குடியில் பரபரப்பு…!!

விவசாயிகள் மத்திய அரசின் வேளாண் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குரும்பூர் பகுதியில் இருக்கும் விவசாய சங்க அலுவலகத்தின் முன்பு அனைத்து விவசாயிகளும் மத்திய அரசின் வேளாண் சட்டத்தை திரும்ப பெறக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டமானது விவசாய சங்கத் தலைவர் ராமையா என்பவரின் தலைமையில்  நடைபெற்றுள்ளது.

இதனை அடுத்து மத்திய அரசின் வேளாண் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி நடைபெற்ற இந்த போராட்டத்தில் விவசாய சங்க நிர்வாகிகள் பாலமுருகன், முருகன், தாசன், முனியாண்டி போன்ற பலர் கலந்து கொண்டார்கள்.

Categories

Tech |