பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தகுதி சுற்று போட்டியில், ராம்குமார், அங்கிதா இருவரும் தோல்வியை சந்தித்தனர்.
பாரிஸ் நகரில் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் ,தகுதி சுற்றுப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு 2 வது சுற்று போட்டியில், 182 வது இடத்தில் இருக்கும் இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னா, பெல்ஜியத்தை சேர்ந்த 125 ஆவது இடத்தில் இருக்கும் வீராங்கனை கிரீத் மினெனை எதிர்கொண்டார் .
இந்த போட்டியில் கிரீத்தின் அதிரடி ஆட்டத்திற்கு , ஈடு கொடுக்க முடியாமல் அங்கிதா திணறினார். இதனால் 2-6, 0-6 என்ற நேர் செட் கணக்கில் அங்கிதா தோல்வியடைந்து வெளியேறினார். இதுபோல ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு 2 வது சுற்றில் ,இந்திய வீரரான தமிழகத்தை சேர்ந்த ராம்குமார், உஸ்பெகிஸ்தான் சேர்ந்த டெனிஸ் இஸ்தோமினுடன் மோதி , 1-6, 2-6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்தார் .