Categories
மாநில செய்திகள்

தடுப்பூசி போட்டால் தான்…. நலத்திட்டங்கள் பெற முடியும் – பாமக நிறுவனர் ராமதாஸ்…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தடுப்பூசி போடுவது ஒன்றே கொரோனவை ஒழிக்க நிரந்தர தீர்வு ஆகும். இதனால் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

மக்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு முதல்வர் வேண்டுகோள்  விடுத்து வருகிறார். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவை ஒழிக்க அனைவரும் தடுப்பூசி போடுவதை கட்டாயமாக்க வேண்டும் என்றும், தடுப்பூசி போட்டால் தான் தமிழக அரசின் நலத்திட்டங்களை பெற முடியும் என்றும் அறிவிக்க வேண்டும் என்று தமிழக அரசை பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் கிராம நிர்வாக அலுவலர்கள் ஏற்பாட்டில் தடுப்பூசி நன்மை குறித்து கிராம மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Categories

Tech |