தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதற்கு மத்தியில் வெப்பச்சலனம் காரணமாக ஒருசில மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. இந்நிலையில் அடுத்த நான்கு நாட்களுக்கு தமிழகத்தில் இதர மாவட்டங்கள் புதுவை, காரைக்காலில் வறண்ட வானிலையே நிலவும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
அதன்படி கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் வெப்பநிலை 3 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பநிலை உயரக்கூடும் என்றும், சென்னையில் வெப்பநிலை அதிகபட்சம் 104 டிகிரி குறைந்தபட்சம் 24 டிகிரி பாரன்ஹீட் அளவாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது