தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதி நிரம்பி வழிகிறது. இதனால் தனியார் மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டு வருகின்றது.
இதனால் கூடுதல் படுக்கை வசதிகளை கொரோனா சிகிச்சை மையங்களை தமிழக அரசு திறந்து வைத்து வருகிறது. இந்நிலையில்தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் 100 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு மையத்தை இன்று திறந்து வைத்தார். இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், சென்னையில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பிற பகுதிகளிலும் கட்டுப்படுத்த அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.