Categories
தேசிய செய்திகள்

ஸ்புட்னிக் வி தடுப்பூசி டெல்லிக்கு நேரடி சப்ளை… அரவிந்த் கெஜ்ரிவால் தகவல்..!!

ஸ்புட்னிக் வி தடுப்பூசியை டெல்லிக்கு சப்ளை செய்வதற்கு அந்நிறுவனம் சம்மதித்து உள்ளதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். டெல்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று சற்று குறைந்து கொண்டு வருகின்றது. இருப்பினும் நேற்று மாநில முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் 18 முதல் 44 வயது உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடுவது நிறுத்தப்பட்டுள்ளதாகவும், தடுப்பூசி இல்லை என்று பேட்டி அளித்து இருந்தார்.

அதுமட்டுமில்லாமல் வெளிநாட்டு தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்கள் தடுப்பூசிகளை இந்திய மாநிலங்களுக்கு நேரடியாக சப்ளை செய்வதற்கு மறுப்பு தெரிவித்ததாக கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து புதிய திருப்பமாக ரஷியாவில் தடுப்பூசியை உற்பத்தி செய்யும் நிறுவனம் டெல்லிக்கு தடுப்பூசியை வழங்க சம்மதம் தெரிவித்துள்ளதாக அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். ஸ்புட்னிக் வி தடுப்பூசியை சப்ளை செய்ய அந்நிறுவனம் சம்பாதித்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாகவும், ஆனால் எவ்வளவு தடுப்பூசி வழங்குவது என்பது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாக அவர் தெரிவித்தார்.

Categories

Tech |