இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி ஒன்றே வழி ஆகும். ஆனால் தடுப்பூசியைப் போட்டுக் கொள்வதற்கு மக்களிடையே தயக்கமும், அச்சமும் இருந்து வருகிறது. எனவே தடுப்பூசி குறித்து தமிழக அரசு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் மக்களுக்கு தடுப்பூசி மீது நம்பிக்கையூட்டும் விதமாகவும், விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் சினிமா பிரபலங்களும் அரசியல் பிரபலங்களும் தடுப்பூசியைப் போட்டுக் கொள்கின்றனர்.
அந்த வகையில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் இன்று காலை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், “இந்த ஆபத்தான காலகட்டத்தில் நம்முடைய மக்களுக்காக களத்தில் இறங்கி போராடி வரும் முன்கள பணியாளர்களான சுகாதார பணியாளர்களுக்கு என்னுடைய மில்லியன் வணக்கங்கள்” என்று தெரிவித்துள்ளார்.