Categories
அரசியல்

“சிதம்பரம் கைது” பழி வாங்கும் நடவடிக்கை…. திருமாவளவன் கண்டனம்..!!

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் கைது செய்யப்பட்டிருப்பது பழிவாங்கும் நடவடிக்கை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

ஐஎன்எக்ஸ் வழக்கில் ஒரு நாள் முழுவதும் தேடப்பட்டு வந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மூத்த வழக்கறிஞருமான ப.சிதம்பரத்தை நேற்று இரவு அவரது இல்லத்தில் சுவர் ஏறி குதித்து சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். இரவோடு இரவாக சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு  தற்போது வரை விசாரிக்கப்பட்டு வருகிறார். இதற்கு பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இது குறித்து கூறுகையில்,

Image result for திருமாவளவன்

சிதம்பரம் அவர்கள்  கைது செய்யப்பட்டது முற்றிலும் பழிவாங்கும் நடவடிக்கை என்று தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பாசிதம்பரம் அவர்களை கைது செய்வதன் மூலம் காங்கிரஸை  பலவீனபடுத்துவது, காங்கிரஸ் மீதான நன்மதிப்பை சீர்குலைப்பது போன்ற அரசியல் நடவடிக்கையாக இச்சம்பவம் நிகழ்ந்து இருக்கிறது என்றார். சுவர் ஏறி குதித்து, கதவை உடைத்துக் கொண்டு போய் கைது செய்திருப்பது அவரை மட்டுமல்ல ஒட்டுமொத்த ஜனநாயகத்தையே கேவலப்படுத்திகிற, கொச்சைப்படுத்துகிற, சட்டத்தை அவமதித்த, சட்டத்தை கொச்சைப்படுத்துகிற ஒரு நடவடிக்கை. பாரதிய ஜனதா அரசின் இந்த நடவடிக்கையை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது என்று அவர் தெரிவித்தார்.

Categories

Tech |