மது விற்பனை செய்து கொண்டிருந்த வாலிபரை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சிங்காரப்பேட்டை காவல்துறையினருக்கு நார்சாம்பட்டி பகுதியில் மது விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சிங்காரப்பேட்டை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல்துறையினருக்கு அதே பகுதியில் வசிக்கும் சங்கர் என்பவர் கர்நாடக மாநில மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து காவல்துறையினரை பார்த்ததும் சங்கர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். அதன் பின் சுமார் 70 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தப்பி ஓடிய சங்கரை தீவிரமாக தேடி வருகின்றனர்.