எட்டு வழி சாலை திட்டமே குழப்பமாக இருக்கின்றது என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
எட்டு வழிச்சாலை தொடர்பாக ஏற்கனவே தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து இந்தத் திட்டத்தின் இயக்குனராக இருக்க கூடிய நபர் சார்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யபட்டது. இந்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி ரமணா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.இதில் நீதிமன்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பியது.
நிலம் கையகப்படுத்தும் முறையானது எந்த அடிப்படையில் நீங்கள் மேற்கொள்ள இருக்கிறீர்கள், இதற்கான விரிவான திட்டமானது தயாரிக்கப்பட்டாமல் சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் இந்த திட்டத்திற்கு எப்படி நீங்கள் நிலம் கையகப்படுத்த முடியும். சுற்றுச்சூழல் அனுமதியை பெற எத்தனை காலம் ஆகும்.
அப்படி ஒரு வேளை நீண்ட காலம் ஆகும் பட்சத்தில் நிலத்தை ஒப்படைத்தவரிடம் என்ன பதில் சொல்லப்போகிறார்கள் என்று கேள்விகளை உச்சநீதிமன்றம் எழுப்பியது.மேலும் , நல்ல திட்டம் என்று சொல்லுறீங்க , சுற்றுசூழல் அனுமதி வாங்கணும்னு குறிப்பிடுறிங்க. இந்தத் திட்டம் ஒரு குழப்பமான திட்டமாக இருக்கின்றது. இதற்கான முழு அறிக்கையை சமர்பிக்க வேண்டும் என்று கூறி வழக்கை செப்டம்பர் 4ம் தேதிக்கு ஒத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.