Categories
தேசிய செய்திகள்

மனைவியின் தலையில் கிரைண்டர் கல்லை போட்டு… துடிக்கத் துடிக்க கொலை செய்த கணவன்… சந்தேகத்தால் நேர்ந்த விபரீதம்..!!

புதுச்சேரி மாநிலத்தில் மனைவி மீது சந்தேகப்பட்டு கணவன் கிரைண்டர் கல்லை தூக்கி போட்டு மனைவியை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி மாநிலம், முத்திரை பாளையம் என்ற பகுதியை சேர்ந்த பாபு என்பவர் பால் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு ரதிகா என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். கடந்த சில நாட்களாக பாபு மனைவி மீது சந்தேகப்பட்டு அவரை சித்திரவதை செய்து வந்துள்ளார். அது மட்டும் இல்லாமல் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை வந்துகொண்டே இருந்துள்ளது. சம்பவ தினத்தன்று கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த கணவன் கிரைண்டர் கல்லை எடுத்து மனைவி தலைமீது போட்டு கொலை செய்துள்ளார். இதையடுத்து சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கணவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் உயிரிழந்த மனைவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மனைவி மீது சந்தேகப்பட்டு கணவன் மனைவியை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |