இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அணி உலக டெஸ்ட் இறுதிப் போட்டி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான 27 வயதான அக்ஷர் படேல், கடந்த 2014 ம் ஆண்டு சர்வதேச போட்டியில் அறிமுகமானார். சமீபத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஜடேஜாவுக்கு காயம் ஏற்பட்டதால், அவரால் போட்டியில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது .இதனால் அக்ஷர் படேலுக்கு ,இந்த வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை அக்ஷர் படேல் சரியாக பயன்படுத்திக் கொண்டார் இந்நிலையில் இந்திய அணி இங்கிலாந்திற்கு சென்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ள இந்திய அணியில் அக்ஷர் படேல் இடம்பிடித்துள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, ‘ அணியில் ஜடேஜா இருப்பதால், இந்திய அணியில் இடம் கிடைப்பது கடினமாக உள்ளது’, என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறும்போது, ‘டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியில் ஜடேஜா, அஷ்வின் இருவரும் சிறப்பாக பந்து வீசி வருகின்றனர்.
அதுமட்டுமின்றி சமீப காலமாகவே ஜடேஜாவின் ஆட்டம் சிறப்பாக காணப்படுகிறது. இதனால் இடது கை சுழல் பந்து வீரரான எனக்கு இந்திய அணியில் இடம் கிடைப்பது கடினமாக உள்ளது. என்னுடைய திறமை மீது ,எனக்கு நம்பிக்கை இல்லாமல் இல்லை. அதோடு எனக்கான வாய்ப்பு கிடைக்கும் போது , அதை சரியாக பயன்படுத்தி விளையாடுவேன். அப்படித்தான் இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் எனக்கு வாய்ப்பு கிடைத்தபோது ,சரியாக பயன்படுத்தி கொண்டேன் . நானும் , ஜடேஜாவும் நல்ல நண்பர்கள் தான். அவர் இருக்கும் இடத்தில் கலகலப்பாக இருக்கும். ஆனால் சில நேரங்களில் அணியில் மாற்றம் ஏற்படும் போது, நமக்கான வாய்ப்பு வரும் வரை காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது “,என்று அவர் கூறினார்.