Categories
தேசிய செய்திகள்

கொரோனா பரிசோதனை செய்ய… இளைஞர்களை அடித்து, இழுத்துச் சென்ற கொடூரம்… பதறவைக்கும் வீடியோ..!!

கர்நாடக மாநிலத்தில் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு இளைஞர்களை தரதரவென அடித்து இழுத்துச் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். பல மாநிலங்களிலும் பரிசோதனை தீவிரப் படுத்தப் பட்டு வருகின்றது. ஒவ்வொரு பகுதிகளுக்கு சென்று மக்களுக்கு பரிசோதனை செய்து வருகின்றனர். அதேபோன்று கர்நாடக மாநிலத்தில் சிக்பெட் என்ற பகுதியில் கோவில் முன்பாக பரிசோதனை செய்த வந்த குழுவினர் அப்பகுதியில் இருந்த மக்களுக்கு பரிசோதனை செய்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த இரண்டு இளைஞர்களை பரிசோதனைக்கு வரும்படி அழைத்துள்ளனர். அதற்கு அந்த இளைஞர் மறுப்பு தெரிவித்ததால், அவர்களை தரதரவென இழுத்துச் சென்று, கடுமையாகத் தாக்கியும், கைகளையும், முறுக்கியும் கொடுமைப்படுத்தியுள்ளனர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இதைப் பார்த்த பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |