Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கொரோனா சிகிச்சை மையம்… 70 படுக்கை வசதிகளுடன்… அதிகாரி தெரிவித்த தகவல்..!!

சேலம் மாவட்டத்தில் வேளாண்மை விற்பனை கூடத்தில் கொரோனா சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவின் 2 வது அலையின் தாக்கம் அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த தற்போது அரசு அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கொரோனா சிகிச்சை மையம் அமைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள உத்தமசோழபுரம் பகுதியில் மாநில வேளாண்மை விற்பனை கூடத்தில் பயிற்சி வளாகம் உள்ளது.

அந்த வளாகத்தில் தொற்று பரவுவதை தடுக்கும் பொருட்டு சிறப்பு சிகிச்சை மையம் 70 படுக்கை வசதிகளுடன் தொடங்கப்பட்டுள்ளது. அந்த சிகிச்சை மையத்தில் நோயாளிகள் அனுமதித்து சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |